காவல்துறையினர் இமாமை அழைத்துச் சென்றதாக, மசூதிக்குள் இருந்த ஆபித் சித்திகி என்பவர் தெரிவித்தார்

இரவு நேரத்தில் மசூதிக்கு வந்த காவல்துறையினர் இமாமை அழைத்துச் சென்றதாக, மசூதிக்குள் இருந்த ஆபித் சித்திகி என்பவர் தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. மசூதியின் இமாமுடன் எங்களால் பேச முடியவில்லை.


நாங்கள் இங்கு வந்தபோது, மசூதிக்கு அருகிலேயே ஒரு போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது, அது சிறிது நேரத்தில் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டது.


மசூதிக்கு ஏற்பட்ட சேதத்தால் கவலையடைந்துள்ள ரியாஸ் சித்திகி, "இப்படிச் செய்வதால் யாருக்கு என்ன கிடைக்கப் போகிறது?" என்று கேள்வி எழுப்புகிறார்.