சென்னை: கோவையில், கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா தொற்று நோய்க்கு எதிராக தீவிரமாக செயல்பட்டுவரும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மருத்துவர்கள், சுகாதாரத்துறை, துப்புரவு பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கோவையில் 4 மருத்துவ குழுக்கள் அமைத்து நோய் தொற்று பாதிப்புகளை கண்டறிந்து வருகிறோம். ஐக்கிய அரபு, காம்பியா நாடுகளில் இருந்து வந்தோர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.கோவையில் மட்டும் 1082 பயணிகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 314பேர் தினந்தோறும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கோவை, கருமத்தம்பட்டி சக்தி பொறியியல் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் தற்காலிக கொரோனா சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்படுகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.