லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் உண்டான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் மட்டும் 5,700க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 281 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.