சென்னை: நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலானதை அடுத்து தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகள் அனைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
'கொரோனா' என்னும் பெருந்தொற்றிலிருந்து, மக்கள் உயிரை பாதுகாக்க, நாடு முழுதும், நேற்று நள்ளிரவு (மார்ச்24), 12:00 மணி முதல், 21 நாட்களுக்கு, அதாவது, ஏப்., 14 இரவு வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ''வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்,'' என, பிரதமர் மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலானது. நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை தவிர அனைத்தும் முடங்கியுள்ளன.
தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைப்பு